close
Choose your channels
PatamPoochi
mayoon

'நிலம் எங்கள் உரிமை': அசுரன் குழுவினர்களுக்கு பா.ரஞ்சித் வாழ்த்து

Wednesday, October 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ‘அசுரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தனுஷின் நடிப்பு, வெற்றிமாறனின் திரைக்கதையில் சொல்ல வந்ததை அழுத்தமாக சொன்ன விதம், ஆழமான வசனங்கள், ஜிவி பிரகாஷின் அட்டகாசமான பின்னணி இசை என பலவிதங்களிலும் இந்த படம் பாராட்டை பெற்று வருகிறது. 

‘அசுரன்’ படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்திற்கு தனது பாணியில் வாழ்த்து தெரிவித்தார். நிலம் எங்கள் உரிமை’ அதனை மீட்போம் என இயக்குனர் பா.ரஞ்சித் தனது திரைப்படங்களிலும் மேடைப்பேச்சுகளிலும் ஆவேசமாக கூறி வரும் நிலையில் இந்த படத்திற்கு தெரிவித்த வாழ்த்திலும் அதனையே கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

தமிழ்த்திரையில் அசுரன்’கள் கதையை நிகழ்த்தி காட்டிய இயக்குனர் வெற்றிமாறன் தன் நடிப்பால் அசுரத்தனம் காட்டிருக்கும் தனுஷ் நம்பிக்கையுடன் தயாரித்த கலைப்புலி தாணு மற்றும் இத்திரைப்பட குழுவினர்களுக்கு மனமகிழ்ந்த நன்றிகள்!! உரக்க சொல்லுவோம்! நிலமே எங்கள் உரிமை!! என்று கூறியுள்ளார். ரஞ்சித்தின் இந்த டுவீட்டுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்டுக்கள் நெட்டிசன்களால் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.