close
Choose your channels

ஓவியாவின் காலை சுற்றிய பாம்பு: வைரலாகும் வீடியோ!

Monday, September 21, 2020 • தமிழ் Comments

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது தொடங்கவிருக்கும் நிலையில் பிக்பாஸ் என்றாலே உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது முதலாவது சீசனின் போட்டியாளரான ஓவியா தான்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கோடிக்கணக்கானோர் மனதில் இடம்பிடித்த ஓவியா அவ்வப்போது தனது டுவிட்டரில் பதிவு செய்யும் டுவிட்டுக்களுக்கு ஆயிரக்கணக்கிலும் லைக்ஸ்களும் கமெண்டுகளும் குவியும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகை ஓவியா வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் தனது காலில் பாம்பு ஒன்று தன்னைத்தானே முழுங்குவதை போன்ற ஒரு டாட்டூவை பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஓவியாவின் காலை பாம்பு சுற்றியது போன்று உள்ள இந்த டாட்டூ வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

ஓவியா இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்பது குறித்து ரசிகர்கள் தங்களுடைய கற்பனைகளை குதிரைகளை கட்டவிழ்த்து கமெண்ட் பகுதிகள் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சிலர் ஓவியாவுக்கு மனநிலை பாதித்து விட்டது என்றும் அவர் மனநிலை சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கமெண்ட்டுகளில் குறிப்பிட்டுள்ளனர்

Get Breaking News Alerts From IndiaGlitz