close
Choose your channels
LoveToday
CWK

சென்னையின் முக்கிய திரையரங்கில் டிக்கெட் கட்டணம் ரூ.99 மட்டுமே: அதிரடி அறிவிப்பு!

Thursday, August 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையின் முக்கிய திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் வெறும் ரூபாய் 99 மட்டுமே என அதிரடியாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் ஜிஎஸ்டி வரி, ஆன்லைன் புக்கிங் கட்டணம் சேர்த்து ரூ.180 முதல் ரூ.200 வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னையின் முக்கிய திரையரங்குகளில் ஒன்றான கமலா தியேட்டரில் 99 ரூபாய் டிக்கெட் கட்டணம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த சலுகை ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளில் சென்னை கமலா தியேட்டரில் 99 ரூபாய் டிக்கெட் கட்டணம் செலுத்தி திரைப்படம் பார்க்கலாம் என்ற அறிவிப்பு சினிமா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விடுமுறை நாட்கள் அல்லாத வார நாட்களில் குறைந்த கட்டணத்தை திரையரங்குகள் வசூல் செய்ய வேண்டுமென்றும் அவ்வாறு வசூல் செய்தால் அதிக பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு வர வாய்ப்பிருப்பதாகவும் ஏற்கனவே திரையுலக பிரபலங்கள் பலர் கூறி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.