close
Choose your channels
Por
Joshwa

வந்த முதல் வாரமே எவிக்சனா? இந்த வார எலிமினேஷன் குறித்த தகவல்..!

Saturday, November 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்த நிலையில் அதில் ஒருவர் இந்த வாரமே எலிமினேஷன் செய்யப்பட்டார் என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும் அதில் சிக்கியவர்களில் ஒருவர் குறைந்த வாக்குகள் அடிப்படையில் அந்த வார இறுதியில் வெளியேற்றப்படுவார் என்பது தெரிந்ததே.

அந்த வகையில் கடந்த ஞாயிறு அன்று வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்தவர்களில் பாலா தவிர அன்னபாரதி, அர்ச்சனா, பிராவோ, தினேஷ் ஆகிய நால்வரும் நாமினேஷனில் சிக்கினர். இவர்களை தவிர அக்சயா, ஐஷு, மணி சந்திரா மற்றும் மாயா ஆகியவர்களும் நாமினேஷன் செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவல்படி இந்த வாரம் அன்னபாரதி எலிமினேஷன் என்று தெரியவந்துள்ளது. அன்னபாரதி பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து ஒரு வாரமே ஆகி உள்ள நிலையில் அதற்குள் அவர் எலிமினேஷன் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.