close
Choose your channels
NMM
NMM

முதல் பாதியின் இயக்குனர் வெற்றிமாறன், 2ஆம் பாதியின் இயக்குனர் நான்: பிரபல இயக்குனரின் திட்டம்

Monday, September 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு திரைப்படத்தின் முதல் பாதியின் இயக்குனர் வெற்றிமாறன் என்றும், இரண்டாம் பாதியில் இயக்குனர் தான் என்றும் பிரபல இயக்குனர் ஒருவர் திட்டமிட்டுள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும், இந்த படம் இதுவரை ரூ.60 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் கௌதம் மேனன் பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது ஒரு படத்தை நானும் வெற்றிமாறனும் சேர்ந்து இயக்க திட்டமிட்டு இருந்தோம் என்றும், முதல் பாதியை வெற்றிமாறனும் இரண்டாவது பாதியை நானும் இயக்க முடிவு செய்யப்பட்டது என்றும் இந்த திட்டம் கோவிட் சமயத்தில் திட்டமிட்ட நிலையில் அதன் பின்னர் இது செயல்படுத்தாத முறை நிலை ஏற்பட்டதாகவும் கூறினார். அதன் பின்னர் தான் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை இயக்க தொடங்கியதாக அவர் தெரிவித்தார். இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ’விடுதலை’ திரைப்படத்தில் கௌதம் மேனன் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் அவரது கேரக்டர் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.