close
Choose your channels
NMM
NMM

சின்ன வயசு நித்யா மேனனா இவர்? அப்பவே எவ்வளவு க்யூட்டா இருக்கார் பாருங்க!

Friday, September 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் பிரமாதமாக நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்ற நடிகை நித்யாமேனனின் சிறுவயது வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதையடுத்து அப்பவே எவ்வளவு க்யூட்டா இருக்கார் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

‘180’ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நித்யா மேனன் குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அவ்வாறு அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த திரைப்படம் ‘ஹனுமன்’. கடந்த 1998ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நடிகை தபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நித்யா மேனன் நடித்துள்ள காட்சிகளின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

சமீபத்தில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ என்ற திரைப்படத்தில் சோபனா என்ற கேரக்டரில் மிகவும் சிறப்பாக நடித்த நித்யா மேனனுக்கு ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இப்படி ஒரு தோழி நமக்கு இருக்க மாட்டார்களா என ஒவ்வொரு ரசிகரும் ஏங்கும் அளவுக்கு அவரது நடிப்பு இருந்தது. அவரது நடிப்புக்கு கண்டிப்பாக விருது கிடைக்கும் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது அவர் க்யூட்டாக இருக்கும் சிறுவயது வீடியோவை ரசிகர்கள் அதனை வைரலாகி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.