close
Choose your channels

நாமினேஷனில் இருந்து காப்பாற்றி கொள்ள காயினை பயன்படுத்திய நிரூப்: சிக்கியது யார்?

Monday, December 6, 2021 • தமிழ் Comments

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் மற்றும் புதிய கேப்டன் தேர்வு நடைபெறும் என்பது தெரிந்ததே. இந்த வார புதிய கேப்டனாக பாவனி தேர்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது நாமினேஷனில் சிக்கியவர்கள் குறித்த தகவல் அடுத்த புரமோ வீடியோவில் உள்ளது.

அதில் இந்த வாரம் அபினய், இமான், அக்ஷரா, நிரூப் மற்றும் சிபி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனை அடுத்து பிக்பாஸ், நிரூப்புக்கு நாமினேஷனில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள ஒரு வாய்ப்பு கொடுக்கிறார். இதனை அடுத்து காயினை பயன்படுத்தி தன்னை காப்பாற்றிக் கொள்வதாகவும், சஞ்சீவ்வை நாமினேட் செய்வதாகவும் நிரூப் அறிவிக்கின்றார்.

அப்போது பிக்பாஸ், ‘உங்களுக்கும் சஞ்சீவ்க்கும் இடையே ஒரு போட்டி வைக்கப்படும் என்றும் அதில் நீங்கள் வெற்றி பெற்றால் நீங்கள் காப்பாற்றப்படுவார்கள் என்றும் அறிவிக்கின்றார். இதனை அடுத்து அந்த போட்டி வைக்கப்படுகிறது. அதில் நிரூப் வெற்றி பெற்று தன்னை நாமினேஷனில் இருந்து காப்பாற்றி கொண்டாரா? என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz