close
Choose your channels
iruttu
Capmaari

ரூ.144 கோடி மதிப்புள்ள வீட்டை சொந்தமாக்கிய விஜய் பட நாயகி!

Friday, November 15, 2019 • தமிழ் Comments

நடிகர் விஜய்யின் வீட்டின் மதிப்பே ரூ.144 கோடி மதிப்பு இருக்குமா என்பது சந்தேகமே. இந்த விஜய்யுடன் நடித்த நடிகை ஒருவர் அமெரிக்காவில் ரூ.144 கோடி மதிப்பில் ஒரு பிரம்மாண்டமாக வீட்டை விலைக்கு வாங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 

விஜய் நடித்த ’தமிழன்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. அதன் பின்னர் பாலிவுட், ஹாலிவுட் படங்களில் பிரபலமான இவர் கடந்த ஆண்டு பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது முதலாம் ஆண்டு திருமண தின விழா விரைவில் கொண்டாடப்பட உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் பிரியங்கா சோப்ரா-ஜோன்ஸ் தம்பதியினர் அமெரிக்காவில்  உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒரு பிரம்மாண்டமான வீட்டை விலைக்கு வாங்கியுள்ளனர். 20,000 சதுர அளவு சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த வீட்டின் மதிப்பு 20 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இது இந்திய மதிப்பில் சுமார் 144 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீட்டில் ஏழு படுக்கை அறைகள், 11 குளியலறைகள், நீச்சல்குளம், பொழுதுபோக்கு அம்சங்கள், சினிமா தியேட்டர், பார் மற்றும் ரெஸ்டாரன்ட், கூடைப்பந்து விளையாடும் உள்ளரங்கம், உடற்பயிற்சி நிலையம் உள்பட பல வசதிகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 

இந்த பிரமாண்டமான வீட்டில் விரைவில் நிக்ஜோன்ஸ்-பிரியங்கா சோப்ரா தம்பதிகள் குடியேறுவார்கள் என்று கூறப்படுகிறது.
 

Get Breaking News Alerts From IndiaGlitz