கிறிஸ், ரோகித் சர்மா இவங்க வேற லெவல்… பேட்டிங் சாதனை பட்டியல்!


Send us your feedback to audioarticles@vaarta.com


பேட்டிங்கில் ரவுண்டு கட்டிக் கலக்கும் மேற்கு இந்திய தீவுகள் அணியின் முக்கிய வீரர் கிறிஸ் கெயில் மற்றும் இந்திய வீரர் ரோகித் சர்மா குறித்து மனம் திறந்து இருக்கிறார் இன்னொரு வீரரான நிக்கோலஸ் பூரான். மேற்கு இந்திய தீவுகள் அணியின் பேட்ஸ்மேன் பூரான் தான் கலந்து கொண்ட பேட்டியொன்றில் டி20 லீக் போட்டிகளைப் பொறுத்த வரையில் ஒரே நேரத்தில் இரட்டை சதம் விளாச முடியும் என்றால் அது கிறிஸ் கெயில் மற்றும் ரோகித் சர்மாவால் மட்டுமே முடியும் என்று கூறி இருக்கிறார்.
அதோடு டி20 போட்டிகளில் அதிக சிக்சர்களையும் விளாசிய வீரர்கள் என்ற முறையிலும் அவர்களை பாராட்டி இருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 3 முறை இரட்டை சதம் விளாசியவர் இந்திய வீரர் ரோகித் சர்மா. அந்த வகையில் டி20 போட்களிலும் இவரால் இரட்டை சதம் அடிக்க முடியும் எனப் பலரும் ரோகித் சர்மாவிற்கு உற்சாகத்தை வழங்கி வருகின்றனர்.
தற்போது 14 ஆவது ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் ரோகித் சர்மாவையும் கிறிஸ் கெயிலையும் குறித்துப் பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் டி20 போட்டிகளில் இரட்டை சதம் அடிக்கும் திறமை இந்த இரண்டு பேரிடம் தான் இருக்கிறது என மனம் திறந்து இருக்கிறார் நிக்கோலஸ் பூரான். முன்னதாக இந்திய வீரர் யுவராஜ் சிங்கும் இதேபோன்ற கருத்தை வெளியிட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வரும் ரோகித் சர்மா இதுவரை டி20 போட்டிகளில் 4 சதம் அடித்து உள்ளார். மேலும் டி20 போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமையையும் சேர்த்து உள்ளார். அதேபோல ஐபிஎல் ராயல் சேலஞ்சர் ஆர்.பி.சி அணிக்காக விளையாடி வரும் கிறிஸ் கெயில் டி20 போட்டி ஒன்றில் 175 ரன்களை விளாசி அதிக ரன்களை அடித்த வீரர் என்ற வரிசையில் முன்னிலை பெற்று இருக்கிறார்.
மேலும் டி20 போட்டிகளில் மிகச் சிறப்பாக அடி இதுவரை 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் குறித்த வீரர் மற்றும் ஒவ்வொரு டி20 தொடர் போட்டிகளிலும் 20 சதங்களை விளாசியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராகவும் கிறிஸ் இருந்த வருகிறார். கிறிஸ் 413 டி20 போட்டிகளில் 13,691 ரன்களை குவித்து உள்ள நிலையில் ரோகித் சர்மா 340 டி20 போட்டிகளில் 8,974 ரன்களை பெற்று இருக்கிறார். இதனால் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர். அந்த வகையில் 14 ஆவது ஐபிஎல் போட்டிகளில் இவர்களிடம் இருந்து இரட்டை சதத்தை எதிர்ப்பார்க்கலாம் என்ற ஆர்வமும் ரசிகர்களிடம் ஏற்பட்டு இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments