close
Choose your channels
siren
lal_salaam

அடுத்த வார எவிக்சனுக்கு நாமினேட் செய்யப்படும் போட்டியாளர் இவரா?  பிக்பாஸ் வீட்டில் செம ட்விஸ்ட்..!

Thursday, November 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் அடுத்த வாரம் எவிக்சனுக்கு நேரடியாக நாமினேட் செய்யும் போட்டியாளர்கள் குறித்த காட்சிகள் உள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்று பூகம்ப டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் அதில் இன்னொரு முக்கிய டாஸ்க் இன்று நடைபெறுகிறது. இந்த டாஸ்க்கில் தோல்வி அடைந்தால் அடுத்த வாரம் எவிக்சனுக்கு நேரடியாக ஒரு போட்டியாளரை மற்ற போட்டியாளர்கள் சேர்ந்து தேர்வு செய்ய வேண்டும் என பிக் பாஸ் அறிவிக்கின்றார்.

வழக்கம்போல் இன்று வழங்கப்படும் டாஸ்க்கிலும் போட்டியாளர்கள் தோல்வி அடைந்த நிலையில் அதன்பின்னர் அடுத்த வாரம் எவிக்சனுக்கு நேரடியாக எந்த போட்டியாளரை தேர்வு செய்வது என்பது குறித்து அனைவரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அர்ச்சனா, விசித்ரா, பூர்ணிமா, விஷ்ணு, மாயா, தினேஷ் ஆகியோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் அநேகமாக தினேஷ் தான் அடுத்த வாரம் எவிக்சனுக்கு நேரடியாக தேர்வு செய்யப்படுவாரோ என்று எதிர்பார்க்கப்படுகிறது ஏனெனில் அவர் தான் மிகவும் கோபமாகவும் அதிர்ச்சியாகவும் இந்த வீடியோ முடியும்போது இருக்கின்றார். இருப்பினும் இன்றைய எபிசோடில் அடுத்த வார எவிக்சனுக்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்டவர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.