மணமகன்களுக்கான பட்டு வேட்டிகளுடன் ராமராஜ் நிறுவனத்தின் புதிய ஷோரூம்!


Send us your feedback to audioarticles@vaarta.com


மணமகன்களுக்கான பட்டு வேட்டிகளுடன் சென்னையில் ராமராஜ் காட்டன் நிறுவனம் புதிய ஷோரூமை திறந்துள்ளது.
ராமராஜ் காட்டன் நிறுவனத்தின் வேஷ்டி கடைகள் ஏற்கனவே பல இடங்களில் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது லக்னா’ என்ற பெயரில் மணமகன்களுக்கான பட்டு வேஷ்டி மற்றும் பட்டு சட்டையுடன் கூடிய புதிய விற்பனையகம் சென்னையில் தொடங்கப்பட்டது
சென்னை நுங்கம்பாக்கம் காதர் நவாஸ்கான் சாலையில் உள்ள இந்த விற்பனையகத்தை துணை மேயர் மகேஷ் குமார் அவர்கள் திறந்து வைத்து முதல் விற்பனையை கல்யாண மாலை மோகன் பெற்று கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் ராம்ராஜ் நிறுவன தலைவர் நாகராஜன், நிர்வாக இயக்குனர் அருணீஷ்வரன் ஆகியோர் கூறியதாவது: திருமணம் நிகழ்ச்சிகளுக்காக மணப்பெண் மற்றும் பெண்களுக்கு விதவிதமான ரகங்களில் பட்டு புடவைகள் கிடைக்கின்றன. ஆனால், மணமகன்களுக்கும், ஆண்களுக்கும் வேட்டியில் குறைந்த அளவில் ரகங்கள் உள்ளன. எங்கள் குடும்ப திருமணத்திற்கே, வித்தியாசமான வேட்டி - சட்டை ரகங்கள் கிடைக்கவில்லை.
அதன் யோசனையே, மணமகனுக்கு என பிரத்யேகமாக 1 லட்சம் ரூபாயில், துாய பட்டு வேட்டி - சட்டைகள் தயாரிக்கப்பட்டன. இந்த கிளை, வேட்டி - சட்டைகளுக்கென தனி ஷோரூமாக இருக்கும். ராம்ராஜ் நிறுவனத்திற்கு 225 கிளைகள் உள்ளன. இதில், வேட்டி - சட்டைகளுக்கென தனி கிளை இது தான். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.