close
Choose your channels

மாறி மாறி பேசும் பிக்பாஸ் ராஜூ: நெட்டிசன்கள் போட்ட குறும்படம்!

Tuesday, November 30, 2021 • தமிழ் Comments

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று கேப்டன் நிரூப் கூறிய ஒரு ஐடியாவுக்கு இமான் அண்ணாச்சி, வருண் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பதும் இதனால் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் அப்படியே திசை திரும்பி இமான் அண்ணாச்சி மற்றும் பிரியங்கா இடையே வெடித்தது என்பதும் அப்போது பிரியங்கா இமானிடம், ‘நீங்கள் வேலை பார்க்காமல் எப்பொழுதெல்லாம் ஓபி அடித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும்' என்றும் கூறினார்.

அதற்கு இமான் அண்ணாச்சி ஆவேசமாக ’எப்போது நான் ஓபி அடித்தேன்’ என்று கூறுங்கள் என கூறினார். அந்த சமயத்தில் தலையிட்ட ராஜு, ‘இமான் அண்ணாச்சி வேலை எல்லாம் சரியாக செய்வார் என்றும் அவர் ஓபி அடிக்கின்றார் என்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்' என்று கூறினார்.

இந்த நிலையில் நேற்று இமான் குறித்து ராஜூ கூறியதையும், இதற்கு முன் இமான் அண்ணாச்சி குறித்து ராஜூ கூறியதையும் நெட்டிசன்கள் குறும்படமாக போட்டுள்ளனர். அந்த குறும்படத்தில், ‘வேலையில் இருந்து இந்த வீட்டில் தப்பித்துக் கொள்பவர் என்ற பட்டத்தை இமான் அண்ணாச்சிக்கு ராஜூ கொடுக்கிறார். அது குறித்து இமான் விளக்கம் கேட்டபோது, நீங்கள் வேலையில் இருந்து தப்பித்துக் கொள்கிறீர்கள் என்று கூறுகிறார். ஆனால் நேற்றைய எபிசோடில் இமான் அண்ணாச்சி வேலைகளை பொறுப்பாக செய்வார் என்றும் அவர் ஓபி அடிப்பதில்லை என்றும் கூறியிருக்கிறார்.

இந்த முரண்பாட்டை குறும்படமாக்கி நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz