'நெஞ்சுக்கு நீதி' தயாரிப்பாளர் போனிகபூர் போலீசில் புகார்: என்ன காரணம்?


Send us your feedback to audioarticles@vaarta.com


சமீபத்தில் வெளியான உதயநிதியின் ’நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் போலீசில் புகார் அளித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான போனிகபூர் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். குறிப்பாக அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ ’வலிமை’ ஆகிய திரைப்படங்களை தயாரித்தவர், தற்போது ’அஜித் 61’ படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். மேலும் அவருடைய தயாரிப்பில் உருவான உதயநிதியின் ’நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் போனிகபூரின் கிரெடிட் கார்டை மர்ம நபர்கள் பயன்படுத்தி ரூபாய் 3.82 லட்சம் பண மோசடி செய்திருப்பதாக தெரிகிறது. இது குறித்து போனிகபூர் அளித்த புகாரின் அடிப்படையில் மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். போனிகபூரின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி மர்ம நபர்கள் யார் என்பது போலீசாரின் விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.