close
Choose your channels
PatamPoochi
mayoon

நயன்தாரா - கவின் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு: டைட்டில் இதுதான்!

Friday, October 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தயாரிக்கும் திரைப்படத்தில் கவின் நடிக்க உள்ளதாக ஏற்கனவே வெளியான செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் இணைந்து உருவாக்கிய ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த திரைப்படத்தில் கவின் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக வெளியான செய்தி ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் ’ஊர்க்குருவி’ என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த டைட்டிலுடன் கூடிய ஒரு வீடியோவை கவின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

கவின் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் லிப்டில் செல்லும் போது விக்னேஷ் சிவனுக்கு கவின் கதை கூறுவது போன்று இருக்கும் காமெடியான இந்த காட்சி வீடியோ அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை விக்னேஷ் சிவன் உதவியாளர் அருண் பேட்ரிசியான் என்பவர் இயக்க உள்ளார் என்பதும் இந்த படம் உண்மை சம்பவம் ஒன்றினை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான கவின் நடித்த ’லிப்ட்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் அவருடைய அடுத்த பட அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.