close
Choose your channels
soodhukavvum

நயன்தாராவின் இதயம்: அன்புடன் கொடுத்த முத்த புகைப்படம் வைரல்!

Saturday, September 21, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை நயன்தாரா ‘மை ஹார்ட்’ என்னும் கேப்ஷனுடன், தனது அன்பு மகனுக்கு முத்தம் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை குழந்தைகள், உயிர் மற்றும் உலகம், குறித்த புகைப்படங்களை அவ்வப்போது நயன்தாரா தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில், நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்பட தொகுப்புக்கு 'எனது இதயம்' என கேப்ஷனை பதிந்துள்ளார். அந்த புகைப்படம் சில நிமிடங்களில் லட்சக்கணக்கான லைக்குகளை பெற்றுள்ளது.

மேலும், இந்த புகைப்பட தொகுப்புக்கு நூற்றுக்கணக்கான கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. அதில் பலர், "இந்த குழந்தை உயிரா அல்லது உலகமா?" என்ற கேள்விகளை எழுப்பியுள்ளனர். சிலர் "இருவருக்கும் சேர்த்து முத்தம் கொடுத்திருக்கலாம்" என கமெண்ட் செய்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா தற்போது மாதவனுடன் ‘டெஸ்ட்’ என்ற படத்தில் யோகி பாபுவுடன், ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும், மலையாளத்தில் ‘டியர் ஸ்டூடண்ட்’ படத்தில் நடித்து வரும் நயன்தாரா , ‘மூக்குத்தி அம்மன் 2’ உள்ளிட்ட சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும், விரைவில் அந்த படங்களின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment