close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

நயன்தாராவின் புதிய டாட்டூ, எந்த இடத்தில் தெரியுமா? வைரல் புகைப்படம்!

Friday, August 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் புதிய டாட்டூவை ரசிகர்கள் கண்டுபிடித்து அதனை இணையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்தார் என்பதும் அதன் பின்னர் தாய்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார் என்பதும் தெரிந்ததே.

சமீபத்தில் ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனாவுக்கு நயன் - விக்கி தம்பதியினர் ஹனிமூன் சென்றுள்ள நிலையில் அங்கிருந்து கொண்டே விக்னேஷ் சிவன் நயன்தாராவின் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்றும் தினந்தோறும் பதிவு செய்யப்படும் இந்த புகைப்படங்கள் இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நயன்தாராவின் பின்கழுத்தில் ஒரு டாட்டூ இருப்பதை தற்போது ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர். மிகவும் அரிதாகவே பின்கழுத்தில் டாட்டூ போடுவார்கள் என்றும், பின்கழுத்தில் டாட்டூ போடுபவர்கள் சவாலான மற்றும் துணிச்சலான முடிவுகளை எடுக்கக் கூடியவர்கள் என்றும் கூறப்படுகிறது.

விக்னேஷ் சிவன் பதிவு செய்யும் புகைப் படங்களில் பெரும்பாலானவைகளில் நயனின் கழுத்துப்பகுதி தெரியும்படி இல்லை என்றாலும், ரசிகர்கள் பின் கழுத்தில் உள்ள டாட்டூவை கண்டுபிடித்து இணையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.