close
Choose your channels
NMM

ஒரு நாள் நீ பெரிதாக  சாதிப்பாய்... தேசிய விருது பெற்ற ஜிவி பிரகாஷின் நெகிழ்ச்சியான பதிவு!

Friday, July 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

68வது தேசிய விருது சற்று முன் வெளியான நிலையில் அதில் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான ’சூரரைப்போற்று’ திரைப்படத்திற்கு 5 விருதுகள் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் ’சூரரைப்போற்று’ திரைப்படத்திற்கு சிறப்பாக இசை அமைத்ததற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெற்றுள்ள ஜிவி பிரகாஷ் நெகிழ்ச்சியுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஒரு நாள் நீ பெரிதாக சாதிப்பாய்... ஒரு நாள் நீ வெற்றி பெறுவாய்... ஒரு நாள் நாம் நினைத்த வகையில் அனைத்தும் நடக்கும்... நீண்ட நாள் காத்திருப்புக்கு பின் நான் எதிர்பார்த்த இந்த நாள் வந்து விட்டது.

இந்த பிரபஞ்சத்துக்கு நன்றி. என் தந்தை வெங்கடேஷ், சைந்தவி, பாவனி, அன்வி ஆகிய என் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி. சூரரைப்போற்று படக்குழுவினர்களுக்கு எனது நன்றி.

எனக்கு இசையமைக்க வாய்ப்பு கொடுத்த இயக்குனர் சுதா கொங்கரா, சூர்யா, 2டி மற்றும் ராஜசேகர் பாண்டியன் அனைவருக்கும் நன்றி.

எனது இசைக்கலைஞர்கள், எனது குழு, சவுண்ட் என்ஜினியர் உள்ளிட்ட அனைவருக்கும் சிறப்பு நன்றி. இந்த நாள் என் வாழ்வின் முக்கிய நாள்” என பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.