close
Choose your channels

5 தேசிய விருதுகள் பெற்ற பிரபல நடிகை சென்ற கார் விபத்து!

Sunday, January 19, 2020 • தமிழ் Comments

ஐந்து முறை தேசிய விருது பெற்ற பிரபல பாலிவுட் நடிகை கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தது பாலிவுட் திரை உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகையும் சமூக ஆர்வலருமான ஷபனா ஆஸ்மி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை ஐந்து முறை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது கடந்த 1974ஆம் ஆண்டு ‘அங்குர்’ என்ற இந்தி படத்தில் நடித்து முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்றார். ஐந்து தேசிய விருதுகள், ஐந்து பிலிம்பேர் விருதுகள் உள்பட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் நடிகை ஷபனா ஆஸ்மி நேற்று தனது கணவருடன் மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள மும்பை-புனே தேசிய நெடுஞ்சாலையில் தனது கணவருடன் காரில் சென்று கொண்டிருந்தார் புனேயில் இருந்து மும்பைக்கு சென்ற அவரது கார் திடீரென லாரி ஒன்றில் மோதியதால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஷபனா ஆஸ்மி படுகாயமடைந்ததாகவும் அவருடைய கணவர் மற்றும் கார் டிரைவர் சிறு காயத்துடன் உயிர் தப்பியதாகவும் வருகிறது.

இந்த நிலையில் படுகாயமடைந்த ஷபனா ஆஸ்மி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஷபனா ஆஸ்மி சமீபத்தில்தான் தனது 75 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz