close
Choose your channels

எங்கள் இளவரசிக்கு அரை பிறந்த நாள்: நடராஜன் நெகிழ்ச்சியான டுவிட்

Friday, May 7, 2021 • தமிழ் Comments

தமிழகத்தைச் சேர்ந்த யார்க்கர் கிங் கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது மகளுக்கு 6 மாத வயது ஆகியதை அடுத்து எங்கள் இளவரசிக்கு அரை பிறந்தநாள் என ந்எகழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் சமீபத்தில் ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணிக்கு விளையாடினார். ஆனால் அவருக்கு திடீரென காயம் ஏற்பட்டதை அடுத்து ஐபிஎல் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இந்த நிலையில் ஐபிஎல் போட்டியே தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் காலில் ஏற்பட்ட காயத்திற்கு சர்ஜரி செய்த நடராஜன் தற்போது காயம் குணமாகி வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் இன்று நடராஜன் தனது மகள் ஹன்விகாவின் ஆறுமாத பிறந்தநாள் என்று அவர் தனது சமூக வலைத்தளத்தில் நெகழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் நான் ஆஸ்திரேலியாவில் இருந்தபோது எங்கள் இளவரசி பிறந்தார் என்றும் இன்று அவருக்கு 6 மாத வயது ஆகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கை என்பது கணிக்க முடியாதது என்றும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் இந்த நேரம் விலைமதிப்பற்றது என்றும் எங்கள் சிறிய இளவரசிக்கு அரை பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் ஒரு பெற்றோராக அவர் பெரிதாகி வளரும் போது சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்பதே எங்கள் உண்மையான ஆசை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நடராஜனின் இந்த நெகழ்ச்சியான பதிவு அனைவரையும் கவர்ந்து உள்ளது என்பதும், இதனையடுத்து அவருடைய பதிவுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz