பிரதமர் மோடியை குடும்பத்துடன் சந்தித்த சமீபத்தில் திருமணம் செய்த நட்சத்திர ஜோடி.. வைரல் புகைப்படம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிரதமர் மோடியை டெல்லியில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நட்சத்திர ஜோடி சந்தித்து ஆசி பெற்ற புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நட்சத்திர ஜோடி நாக சைதன்யா மற்றும் சோபிதா துளிபாலா என்பது தெரிந்தது. இந்த நிலையில், நாகார்ஜுனன் தனது மகன், மருமகள் உள்பட குடும்பத்துடன் பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்தார்.இது
குறித்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், இந்த சந்திப்பின்போது தனது தந்தை க்கினேனி நாகேஸ்வர ராவ் குறித்து எழுதப்பட்ட புத்தகத்தை மோடிக்கு பரிசாக அளித்தார். இந்த புத்தகம், அக்னி நாகேஸ்வராவின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. பத்மபூஷன் விருது பெற்ற எழுத்தாளர் யர்லகட்டா லட்சுமி பிரசாத் இந்த புத்தகத்தை எழுதி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சந்திப்பின்போது நாகேஸ்வர ராவ் தெலுங்கு சினிமாவிற்கு அளித்த பங்களிப்பு குறித்து மோடி பாராட்டியதாகவும், அப்போது நாகார்ஜுனா, அவர் கட்டிய அன்னபூர்ணா ஸ்டுடியோ மற்றும் அன்னபூர்ணா திரைப்படக் கல்லூரியின் முன்னேற்றத்தை குறிப்பிட்டு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து பிரதமர் மோடி, தனது எக்ஸ் பதிவில், நாகார்ஜுனா குடும்பத்தினரை சந்தித்தது குறித்து மகிழ்ச்சியை பதிவு செய்துள்ளார்.
Profoundly thankful to Hon'ble Prime Minister @narendramodi ji for today's meeting at Parliament House. It was an honor to present 'Akkineni Ka Virat Vyaktitva' by Padma Bhushan awardee Dr.
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) February 7, 2025
Yarlagadda Lakshmi Prasad, a tribute to my father ANR garu's cinematic heritage. Your… pic.twitter.com/FLXUIDQGYA
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com