close
Choose your channels
NMM
NMM

டீன் ஏஜ் பெண்ணுக்கு இணையாக டான்ஸ் ஆடும் 55 வயது நதியா.. செம வீடியோ

Friday, September 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை நதியா கடந்த 80, 90களில் பிரபலமான நடிகையாக இருந்தவர் என்பதும் அன்றைய இளைஞர்களின் கனவுக் கன்னியாக இருந்தவர் என்பதும் தெரிந்ததே. ’பூவே பூச்சூடவா’ என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், சிவகுமார், பிரபு உள்பட பல பிரபலங்களுடன் நடித்தார் என்பதும் அவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 1988ஆம் தேதி திருமணம் ஆகி அதன் பின்னர் அமெரிக்காவில் செட்டில் ஆன நதியா, நீண்ட இடைவெளிக்கு பின்னர் 2004 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த ’எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ என்ற திரைப்படத்தில் ரீ எண்ட்ரி ஆனார். இந்த நிலையில் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் நதியா பிசியான நடிகையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நதியாவுக்கு 55 வயது ஆகியும் இப்போதும் அவர் இளம் நடிகைக்கு இணையாக இளமையாக காட்சி அளிக்கிறார் என்பதும், அவருடன் நடித்த நடிகைகள் எல்லாம் வயதான தோற்றத்தில் இருக்கும் நிலையில் அவர் மட்டும் இன்னும் இளமையான தோற்றத்தில் இருப்பது பலருக்கும் ஆச்சரியமான விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் நடிகை நதியா தனது சமூக வலைத்தளத்தில் டீன்ஏஜ் இளம்பெண்ணுடன் நடனமாடிய வீடியோவை பதிவு செய்துள்ளார். டீன் ஏஜ் பெண்ணுக்கு இணையாக 55 வயதில் நதியா நடனமாடிய வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.