என்னுடைய படத்தில் நடிக்க மறுத்த சிவகுமார்': மிஷ்கின் கூறிய பரபரப்பு தகவல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தன்னுடைய படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க சிவகுமாரை அணுகியதாகவும் ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார் என்றும் பிரபல இயக்குனர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல இயக்குனர் மிஷிகின் இயக்கத்தில் உருவான ’பிசாசு’ என்ற திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க சூர்யா, கார்த்தியின் தந்தை சிவகுமாரை அணுகியதாகவும் ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார். அதன் பின்னரே அந்த வேடத்தில் நடிக்க ராதாரவியை தான் அணுகியதாக அவர் கூறினார்.
மேலும் சிவகுமார் குறித்து அவர் கூறிய போது ’திரை உலகில் மது, புகை என எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஒரு மனிதராக சிவகுமார் இருந்தார் என்றும் அதேபோல் அவர் தன்னுடைய மகன்களையும் வளர்த்துள்ளார் என்றும் தெரிவித்தார். அவர் ஒரு சிறந்த அப்பா மட்டுமின்றி தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ஒரு மனிதர் என்றும் சிவகுமாருக்கு புகழாரம் சூட்டினார்.
இந்த நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிசாசு 2’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.