close
Choose your channels

கடைசியா ஒருமுறை அவரை பார்க்க கூட முடியலையே: மைனா நந்தினி உருக்கம்

Thursday, September 10, 2020 • தமிழ் Comments

தொலைக்காட்சி மற்றும் திரைப்பட காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி இன்று திடீரென உடல்நலக் குறைவால் காலமான செய்தி தொலைக்காட்சி நட்சத்திரங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக அவருடன் பத்து வருடங்கள் உடன் பணிசெய்த நடிகை மைனா நந்தினிக்கு இந்த செய்தி பெரும் அதிர்ச்சியாக இருந்தது

இதுகுறித்து மைனா நந்தினி கூறியபோது, ‘தன்னுடன் பணிபுரியும் சக கலைஞர்கள் ஒருவர் முன்னேறினால் அதைப் பார்த்து சந்தோஷப்படும் முதல் நபராக தான் வடிவேல் பாலாஜி இருப்பார். யார் நன்றாக காமெடி செய்தாலும் அவர்களுக்கு எழுந்து நின்று பாராட்டு தெரிவிப்பார். அத்தகைய ஒரு நல்ல மனிதர் வடிவேல் பாலாஜி

வடிவேல் பாலாஜியிடம் கடைசியாக என்னிடம் மருத்துவமனையில் இருக்கும்போது பேசினார். அப்போது கூட ’நீ என்னை பார்க்க மருத்துவமனைக்கு வர வேண்டாம் நீ கர்ப்பமாக இருக்கிறாய் இங்கே வந்தால் உனக்கு பாதிப்பு ஏற்படும்’ என்று கூறினார். மேலும் நீ ஒன்றும் கவலைப்படாதே, நான் கண்டிப்பாக மீண்டு வந்து விடுவேன், நாம் ரெண்டு பேரும் சேர்ந்து ஜாலி பண்றோம்’ என்று சந்தோஷமாக தான் பேசினார்

ஆனால் அவருடைய மறைவு செய்தி கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். நான் தற்போது மருத்துவமனையில் இருப்பதால் கடைசியாக அவரை ஒரு முறை பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு மிகவும் உள்ளது’ என்று மைனா நந்தினி கூறியுள்ளார். வடிவேல் பாலாஜியின் இழப்பு சின்னத்திரை கலைஞர்களுக்கு ஈடுகட்ட முடியாத ஒன்று என்பது மைனா நந்தினியின் பேட்டியில் இருந்து தெரிய வருகிறது

Get Breaking News Alerts From IndiaGlitz