close
Choose your channels

கணவருடன் வெளிநாட்டு சுற்றுலா சென்ற மைனா நந்தினி .. கலர்ஃபுல் புகைப்படங்கள்..!

Friday, April 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவி தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமான மைனா நந்தினி தனது கணவருடன் வெளிநாட்டு சுற்றுலா சென்ற புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’சரவணன் மீனாட்சி’ என்ற தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மைனா நந்தினி. இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 104 நாட்கள் தாக்குப் பிடித்தார் என்பதும் மூன்றாவது ரன்னர் அப் என்ற நிலையை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கான ஃபாலோயர்கள் வைத்துள்ள மைனா அவ்வப்போது தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்து வருவார் என்பதும் அவை மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை மைனா தற்போது தனது கணவருடன் தாய்லாந்தில் உள்ள பட்டாயா சிட்டி என்ற பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அங்கிருந்து கொண்டு அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் வைரல் ஆகி வருகின்றன. இயற்கை அழகு காட்சிகள் அடங்கிய தாய்லாந்தில் மைனா நந்தினி தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.