close
Choose your channels
siren
lal_salaam

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படம் '800': இலவசமாக ஓடிடியில்..!

Tuesday, November 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இலங்கை சுழற் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ’800’ கடந்த அக்டோபர் 6ஆ, தேதி திரையரங்குகளில் வெளியானது. மதுர் மிட்டல் என்பவர் முத்தையா முரளிதரன் கேரக்டரில் நடித்திருக்க அவருடன் மகிமா நம்பியார், நரேன், நாசர், வடிவுக்கரசி, ரித்விகா, வேல ராமமூர்த்தி உள்பட பலர் நடித்து இருந்தனர்.

ஸ்ரீபதி என்பவரது இயக்கத்தில் உருவான இந்த படம் திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் இந்த படம் தற்போது ஓடிடியில் ரிலீசாவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தை ஜியோ சினிமாவில் டிசம்பர் 2ஆம் தேதி முதல் இலவசமாக பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த படம் ஜியோ சினிமாவில் டிசம்பர் 2ஆம் தேதி ஒளிபரப்பாக இருப்பதாகவும் இதற்கு எந்தவிதமான கட்டணமும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.