close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

தளபதி விஜய்யின் 'வாரிசு' ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்ட தமன்! செம வைரல்!

Saturday, August 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் ஆந்திராவில் நடந்து வரும் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக சமீபத்தில் சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு விஜய் கிளம்பிச் சென்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நடந்து வருவதாக இசையமைப்பாளர் தமன் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுகுறித்த மாஸ் புகைப்படம் ஒன்றை அவர் பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினம் துறைமுகத்தில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் இன்னும் சில நாட்கள் தொடர்ச்சியாக விசாகப்பட்டினம் துறைமுகத்தில் படப்பிடிப்பு நடக்கும் என தெரிகிறது.

விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை வம்சி இயக்கவுள்ளார். தில் ராஜூ தயாரிப்பில் தமன் இசையில் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண கே.எல் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.