தனுஷின் 'கேப்டன் மில்லர்': இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கொடுத்த சூப்பர் அப்டேட்!


Send us your feedback to audioarticles@vaarta.com


தனுஷ் நடித்துவரும் ’கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்க இருப்பதாக வெளியான செய்திகளை ஏற்கனவே பார்த்தோம். அது மட்டுமின்றி சிவராஜ்குமார் அந்த படத்தில் தனுஷின் அண்ணனாக நடிப்பதாகவும் கூறப்பட்டது. இருப்பினும் இந்த தகவலை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்காத நிலையில் சற்றுமுன் சிவராஜ்குமார் 'கேப்டன் மில்லர்’ படத்தில் இணைவதை அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
‘கேப்டன் மில்லர்’ படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் அவர்கள் எங்களது 'கேப்டன் மில்லர்’ படத்தில் இணைந்து உள்ளதை பெருமையுடன் கூறுகிறேன் என்றும் அவரை வரவேற்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்த படத்தில் சிவராஜ்குமார் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே சிவராஜ்குமார், ரஜினியின் ’ஜெயிலர்’ படத்திலும் நடித்து வரும் நிலையில் தற்போது தனுஷின் ’கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிவி பிரகாஷ் இசையில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார்.
We are honoured in Welcoming the Legendary superstar,Karunada Chakravarthy @NimmaShivanna to the world of #CaptainMiller ??♥️#ShivaRajkumarInCaptainMiller @dhanushkraja @sundeepkishan @priyankaamohan @johnkokken1 @nivedhithaa_Sat @SathyaJyothi pic.twitter.com/8oJnd47Mf4
— G.V.Prakash Kumar (@gvprakash) December 8, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments