நான் உயிரிழந்த பிறகு.. பிறந்த நாளில் டி இமானின் உணர்ச்சிமயமான பதிவு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிரபல இசையமைப்பாளர் டி. இமான் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
எனது பிறந்தநாளில் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாளில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், தமிழக அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் முழு உடல் உறுப்பு தானத்திற்கு என்னை பதிவு செய்திருக்கிறேன். இதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் வெளியிட்டுள்ள இன்னொரு வீடியோவில், "உடல் உறுப்பு தானம் நான் செய்ததால் மற்றவர்களுக்கு ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்று நம்புகிறேன். என் முழு உடலையும் தானமாக அளித்து அதற்கான டோனர் கார்டையும் பெற்றுள்ளேன். நான் உயிரிழந்த பிறகு என் உடல் யாராவது ஒருவருக்கு பயன்படும் என்றால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தான். நாம் இறந்த பிறகும் உயிரோடு இருக்கலாம் என்று அற்புதமான விஷயத்துக்கு இந்த செயல் வழிவகுக்கும்," என்று கூறியுள்ளார். மேலும், அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும்," என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, விஷால், சரத்குமார், மாதவன், பிரசன்னா, சூர்யா, சமந்தா, த்ரிஷா, சினேகா, காஜல் அகர்வால் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ள நிலையில், அந்த பட்டியலில் தற்போது டி. இமான் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
I extend my sincere gratitude to one and all for your unconditional love on my Birthday.
— D.IMMAN (@immancomposer) January 24, 2025
On this day, I feel elated to express that I have registered myself for full body organ donation under TamilNadu Government’s Health and Family Welfare Department at Rajiv Gandhi Government… pic.twitter.com/KGxo8jTjUJ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments