மனைவியை 8 முறை கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்திய கணவர்: அதிர்ச்சி காரணம்!


Send us your feedback to audioarticles@vaarta.com


தனது மனைவி ஆண் குழந்தை பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக 8 முறை கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தியதாக பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மும்பையில் உள்ள பெண் ஒருவருக்கு கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
ஆனால் அந்த பெண்ணின் கணவர் தனக்கு ஆண் குழந்தைதான் வேண்டும் என்று கண்டிப்புடன் தனது மனைவியிடம் கூறி அவ்வப்போது துன்புறுத்தியதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு அந்த பெண் மீண்டும் கர்ப்பம் அடைந்தார். ஆனால் கர்ப்பத்தில் இருப்பது பெண் குழந்தை என மருத்துவர் ஒருவர் மூலம் அறிந்துகொண்டு கட்டாயமாக கருக்கலைப்பு செய்ததாக தெரிகிறது.
இதேபோல் தொடர்ந்து பெண் குழந்தை என தெரிந்து எட்டு முறை கட்டாயமாக கருக்கலைப்பு செய்ததாகவும் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக நவீன சிகிச்சை செய்ய தன்னை தாய்லாந்துக்கு அழைத்துச் சென்றதாகவும் கிட்டத்தட்ட 1500க்கும் மேற்பட்ட ஸ்டீராய்டு மற்றும் ஹார்மோன் ஊசிகள் தனக்கு செலுத்தப்பட்டதாகவும் அந்த பெண் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக கணவர் செய்த கொடுமைகளை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கணவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.