close
Choose your channels
Don
Nenjukku Needhi

சிறந்த கேப்டன்களில் முதலிடம் தோனிக்குத்தான்… புகழ்ந்து தள்ளும் மற்றொரு பிரபலம்!

Saturday, August 28, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர விளையாட்டு வீரர் டூ பிளசி. இவர் ஒருகாலத்தில் அந்த அணியின் மிகச்சிறந்த கேப்டன் என்றும் புகழப்பட்டவர். தற்போது சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார்.

தற்போது ஐபிஎல் போட்டிகள் மீண்டும் துவங்கவுள்ள நிலையில் சிஎஸ்கே கேப்டன் மகேந்திரசிங் தோனி குறித்துப்பேசிய டூ பிளசி, சிறந்த கேப்டன்கள் வரிசையில் முதலிடம் தோனிக்குத்தான். அவருடைய தலைமையில் சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். அதோடு ஒரே அணியில் 4 இண்டர்நேஷனல் கேப்டன்களும் விளையாடி உள்ளனர்.

மேலும் சிஎஸ்கே அணியின் தேர்வும் சிறப்பாக இருக்கும். அதுவே வெற்றிக்கு முக்கிய காரணம் மற்றும் பலமாகவும் அமைந்துள்ளது. அதனால் என்னைப் பொறுத்தவரை சிறந்த கேப்டன் வரிசையில் தோனி முதலிடம் வகித்து வருகிறார். கடந்த 10 வருடங்களாக அவருடன் விளையாடி வருகிறேன். அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன் எனத் தெரிவித்து உள்ளார்.

ஃபா டூ பிளசி (faf du Plessis) தற்போது கரீபியன் பிரீமியர் லீக்கில் லூசியா கிங்ஸ் அணியுடன் இணைந்து விளையாடி வருகிறார். அந்த அணியின் கேப்டனாகவும் இருந்து வருகிறார். வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிவரை நடைபெற உள்ள இந்தப்போட்டிகள் முடிந்தவுடன் ஐபிஎல் போட்டிகளுக்காக சிஎஸ்கே அணியுடன் இணைந்து விளையாடுவார். கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.