close
Choose your channels

தல வாங்கிய பழைய ராஜ்தூத் பைக்… வைரலாகும் புகைப்படம்!

Wednesday, December 1, 2021 • தமிழ் Comments

கேப்டன் கிங் தோனி ஒரு பைக் பிரியர் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். இதனால் பல விலையுயர்ந்த மோட்டார் வாகனங்களையும் புதுப்புது பைக்குகளையும் தன்னுடைய வீட்டில் குவித்து வைத்திருக்கும் தல தோனி தற்போது பிரத்யேகமாக கஸ்டமைஸ் செய்யப்பட்ட யமாஹா RD 350 பைக்கை வாங்கியிருக்கிறார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

யமாஹா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தன்னுடைய உற்பத்தியை நிறுத்திவிட்ட RD 350 பைக்கைத்தான் தல தோனி தற்போது பிரத்யேகமாக கஸ்டமைஸ் செய்து வாங்கியிருக்கிறார். அதாவது R சீரிஸ் பைக்குகளான R5, RD 350, RD 400, RX 100, RXZ, RX 135 போன்ற வாகனங்களை யமாஹா நிறுவனம் பல ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த சையத் ஜதீர் என்ற பைக் வடிவமைப்பாளர் தல தோனிக்காக ராஜ்தூத் 350 என்று சொல்லப்படும் RD 350 பைக்கை வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார். Competition green நிறத்தில் இவர் உருவாக்கப்பட்ட யமாஹா RD 350 பைக் தற்போது தல தோனியின் கலெக்ஷனில் இணைந்திருப்பதும் குறிப்பிட்டத்தக்கது.

மேலும் தனக்கு பிரத்யேக பைக்கை உருவாக்கிக் கொடுத்த சையத் ஜதீருக்கு கேப்டன் தோனி ஒரு அற்புதமான பரிசையும் கொடுத்திருக்கிறார். அதாவது மஞ்சள் நிறத்தில் வடிவமைக்கப்பட்ட இன்னொரு யமாஹா RD 350 பைக்கில் தல தோனி தன்னுடைய கையெழுத்தை போட்டுக்கொடுத்துள்ளார். இது என்னுடைய வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு என்று சையத் குறிப்பிட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz