close
Choose your channels
sisa

வெறும் 50 ரூபாய்க்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன்: ஆச்சரிய தகவல்

Monday, October 5, 2020 • தமிழ் Comments

எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க ஆயிரக்கணக்கில் செலவாகும் என்ற நிலையில் வெறும் 50 ரூபாய்க்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து தர இருப்பதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

இந்தியாவிலேயே மிகவும் மலிவான எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யும் நிறுவனம் ஒன்று டெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள சீக்கிய குருத்வாரா மேனேஜ்மென்ட் கமிட்டி ஆரம்பித்துள்ள இந்த ஸ்கேன் சென்டரில் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க வெறும் 50 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஏழை எளியவர்களுக்கு மட்டும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க ரூ.50 என்றும் மற்றவர்களுக்கு ரூ.800 கட்டணம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செண்டரில் டயாலிசிஸ் செய்ய 600 ரூபாய் மட்டுமே கட்டணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்கேன் செண்டருக்கு தேவையான ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் சீக்கிய குருத்வாரா கமிட்டி நன்கொடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மிகவும் மலிவான விலையில் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து கொடுக்கும் இந்த செண்டர் ஏழை எளிய மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனியார் ஸ்கேன் சென்டரில் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க 2500 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz