close
Choose your channels
Don
Nenjukku Needhi

பனிச்சறுக்கு விளையாடிய பிரபல நடிகர் உயிரிழப்பு!

Thursday, January 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரான்ஸ் நடிகரான காஸ்பார்ட் உல்லியேல் ஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்கு விளையாடியபோது சக வீரருடன் மோதிய விபத்தில் உயிரிழந்து விட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரான்ஸ் நடிகரான காஸ்பார்ட் உல்லியேல் ஆண்களுக்கான வாசனை திரவியம் குறித்த விளம்பரம் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானவர். அதேபோல 2017 ஆம் ஆண்டு வெளியான It’s Only the end of the world திரைப்படத்தில் துணைக்கதாபாத்திரத்தில் இடம்பெற்று சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதற்காக 2017 இல் பிரெஞ்சு சீசர் விருதையும் தட்டிச்சென்றார்.

தற்போது டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கும் மார்வெல் மினி சீரிஸ் மூன் நைட்டிலும் உல்லியேல் நடித்துள்ளார். இவர் கடந்த செவ்வாய்கிழமை பிரான்ஸ் நாட்டின் மாண்ட்வலேசான் பகுதியில் அமைந்திருக்கும் பனிச்சறுக்கில் விளையாடிக் கொண்டிருந்தபோது சக வீரருடன் மோதி மயங்கியதாகவும் இதையடுத்து ஹெலிகாப்டரில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் காஸ்பார்ட் உல்லியேல் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துவிட்டதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. 37 வயதான இளம் நடிகர் உயிரிழந்த சம்பவம் தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.