close
Choose your channels

மோகன்லால் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜமவுலி

Saturday, November 28, 2015 • தமிழ் Comments

உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆன 'பாகுபலி' படத்தை இயக்கிய இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி அந்த படத்தை தெற்கு ஆசியா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்க நாடுகளில் ரிலீஸ் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும் 'பாகுபலி 2' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதால் அதன் ஆரம்பகட்ட பணிகளிலும் மும்முரமாக உள்ளார்.

இந்நிலையில் 'பாகுபலி' படத்தை அடுத்து அவர் மோகன்லாலுடன் இணைந்து 'கருடா' என்ற படத்தை பிரமாண்டமாக இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. நேற்று தனது உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக கேரளா சென்ற எஸ்.எச்.ராஜமவுலி இதுகுறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தற்போது பாகுபலி 2' படத்தின் பணியில் மட்டும் ஈடுபட்டு வருவதாகவும், அடுத்த படம் குறித்து எவ்வித ஐடியாவும் தற்போது இல்லை என்றும் இந்த படத்தை முடித்த பின்னர்தான் அதுகுறித்து ஆலோசிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz