ரஜினியின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்: அமைச்சர் ஆர்பி உதயகுமார்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது அரசியல் நிலை குறித்து நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரது முடிவு என்னவாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்களும் அரசியல் பிரபலங்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்
அந்த வகையில் ரஜினிகாந்த மிகவும் தெளிவானவர் என்றும் அவர் சரியான முடிவைத்தான் எடுப்பார் என்றும் ஏற்கனவே அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் கூறியதை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அமைச்சர் ஆர்பி உதயகுமார் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது ’ரஜினிகாந்த் மிகவும் நல்லவர் என்றும், அவர் அரசியல் குறித்து என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருப்பது போலவே நானும் காத்திருக்கின்றேன்’ என்றும் கூறினார்
ரஜினி அரசியல் கட்சி ஆரம்பித்தால் பிற கட்சியில் உள்ள பல பிரபலங்கள் ரஜினி கட்சியில் இணைய வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்த நிலையில் அதிமுகவில் இருந்து எத்தனை பேர் ரஜினி கட்சியில் இணைவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்