close
Choose your channels

ரஜினிக்கு திடீரென ஆதரவு தெரிவித்த அதிமுக அமைச்சர்:

Thursday, January 23, 2020 • தமிழ் Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பெரியார் குறித்து அவமரியாதையாக பேசி விட்டதாக கிட்டத்தட்ட அனைத்து கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதில் அதிமுக அமைச்சர்கள் ஒருசில அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதிமுகவின் இன்னொரு அமைச்சரான ராஜேந்திர பாலாஜி அவர்கள் ரஜினிக்கு ஆதரவாக ஒரு சில கருத்துக்களை தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

துக்ளக் ஆண்டு விழாவில் பெரியார் குறித்து ரஜினிகாந்த் அவமரியாதையாக ஏதும் பேசவில்லை என்றும் அந்த ஊர்வலத்தில் செருப்பு வீசப்பட்டது, ராமர் சிலை ஆடையின்றி கொண்டு வந்ததாக மட்டுமே அவர் பேசியதாகவும், ஆனால் இதனை திக மற்றும் திமுகவினர் திரித்து பொய் கூறுகிறார்கள் என்றும் அவர் கூறினார். மேலும் ரஜினிகாந்த் தன் மனதில் பட்டதை பேசுபவர் என்றும் அவர் தவறாக எதுவும் அந்த விழாவில் பேசவில்லை என்றும் ராஜேஷ் பாலாஜி மேலும் கூறினார் 

ஒரு ஆன்மீகவாதியான ரஜினிகாந்த்தை வேண்டுமென்றே குறி வைத்து அவரது கொடும்பாவி எரிப்பது, அவரது வீட்டை முற்றுகையிடுவதுமான செயல்களில் ஒரு சிலர் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் இவ்வாறு செய்தும் ரஜினி ரசிகர்கள் பொறுமையாக இருக்கிறார்கள் என்றால் தனக்கு இது ஆச்சரியமாக இருக்கிறது என்றும் கூறினார் அதிமுகவின் ஒரு சில அமைச்சர்கள் ரஜினியை குற்றஞ்சாட்டி பேசி வந்த நிலையில் தற்போது இன்னொரு அமைச்சர் அவருக்கு ஆதரவாக பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 

Get Breaking News Alerts From IndiaGlitz