close
Choose your channels

விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் தனுஷ்-சிம்பு பட நாயகி!

Tuesday, November 5, 2019 • தமிழ் Comments

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது ஒரே நேரத்தில் சுமார் அரை டஜன் படங்களுக்கு மேலாக நடித்து கொண்டு வரும் நிலையில், அவர் நடித்து வரும் படங்களில் ஒன்று ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’

இந்த படத்தை அறிமுக இயக்குனர் வெங்கட் கிருஷ்ணா கோபிநாத் என்பவர் இயக்கி வருகிறார். இவர் பிரபல இயக்குநர் எஸ்பி ஜனநாதன் அவர்களின் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வித்தியாசமான இந்த படத்தின் தமிழ் டைட்டிலை விஜய் சேதுபதியை தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க முதலில் அமலாபால் பரிசீலனையில் இருந்தார். ஆனால் திடீரென தற்போது மேகாஆகாஷ் நாயகியாக படக்குழுவினர் ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். இவர் ரஜினிகாந்தின் ’பேட்’ட, தனுஷ் நடித்த ’என்னை நோக்கி பாயும் தோட்டா’, சிம்பு நடித்த ’வந்தா ராஜா தான் வருவேன்’உள்பட ஒருசில படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

மியூசிக் த்ரில்லராக உருவாகி வரும் இந்த படத்தில் மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைக்க இருப்பதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
 

Get Breaking News Alerts From IndiaGlitz