close
Choose your channels

இந்த வருசம் பிக்பாஸ் உங்களால பண்ணவே முடியாது: கமலுக்கு மீராமிதுன் சவால்

Tuesday, September 8, 2020 • தமிழ் Comments

இந்தியாவின் சூப்பர் மாடல்களில் ஒருவரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மீராமிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வந்ததாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக விஜய் சூர்யா உள்பட ஒருசில பிரபலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய பதிவுகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அவருடைய கவனம் கமல்ஹாசன் மீது திரும்பி உள்ளது. இந்த ஆண்டு கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த முடியாது என்று சவால் விடும் வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

கல்யாண வீட்டில் சீப்பை ஒளித்து வைத்து கொண்டால் கல்யாணமே நடக்காது என்பது போல் என்னுடைய ஒரே ஒரு வீடியோ காட்சியை மறைத்துவிட்டால் என்னுடைய தொழிலையே நிறுத்திவிடலாம் என்று கமல்ஹாசன் அவர்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் இதே போல் செய்து கொண்டிருந்தால் நானும் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை வரும்.

கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது நீங்கள் கொடுத்த தீர்ப்பு மிகவும் தவறு. ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்த போது ஆணாகிய நீங்கள் இன்னொரு ஆணுக்கு ஆதரவாக இருந்ததை ஏற்று கொள்ளவே முடியாது. எனவே உங்கள் மீது நான் தகுந்த நடவடிக்கை எடுப்பேன். நீங்கள் என்னுடைய தொழிலை முடக்க முயற்சித்தால் நானும் உங்கள் தொழிலையும் முடக்குவேன். நான் உங்கள் மீது வழக்கும் பதிவு செய்வேன்.

இந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியை உங்களால் பண்ணவே முடியாது. நான் குறிப்பிடும் வீடியோ என்னுடைய கைக்கு வரும்வரை பிக் பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பையும் நடத்த விடமாட்டேன், எந்த பணியையும் நடத்த விடமாட்டேன். நீதிமன்றத்தில் தடை வாங்குவேன்’ என்று மீராமிதுன் கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.
 

Get Breaking News Alerts From IndiaGlitz