close
Choose your channels
Don
Nenjukku Needhi

ரீ எண்ட்ரி கொடுத்த நடிகை மீரா ஜாஸ்மின்… க்யூட்டான புகைப்படம் வைரல்!

Saturday, January 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த நடிகை மீரா ஜாஸ்மின் நீண்டநாட்களாக சினிமா மற்றும் சோஷியல் மீடியாக்களில் தலைக்காட்டாமல் இருந்துவந்தார். தற்போது முதல் முறையாக இன்ஸ்டாகிராம் கணக்கைத் துவங்கி அதில் தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

தமிழில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “ரன்“ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். அதற்குப் பிறகு நடிகர் விஜய், அஜித், தனுஷ், விஷால், மாதவன், எஸ்.ஜே.சூர்யா எனப் பல முன்னணி நடிகர்களுடன் முக்கியத் திரைப்படங்களில் நடித்து ரசிக்களிடையே மிகவும் பிரபலமானார். அதுவும் “சண்டைக்கோழி“ திரைப்படத்தில் இவருடைய நடிப்பை பார்த்து தமிழ் ரசிகர்கள் மிரண்டு போயிருந்தனர்.

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் அதிக கவனம் செலுத்தாமல் இருந்துவந்தார். சோஷியல் மீடியாக்களிலும் நடிகை மீரா ஜாஸ்மின் தலைக்காட்டவே இல்லை. தற்போது கிட்டத்தட்ட 5 வருடங்களுக்குப் பிறகு படு ஃபிட்டான உடல் தோற்றத்தோடு நடிகை மீரா ஜாஸ்மின் காட்சிதருகிறர். மேலும் மலையாளத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து முடித்திருக்கும் இவர் புதிதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணக்கை துவங்கியிருக்கிறார். ரசிகர்கள் இதற்கு அதிக வரவேற்பு தந்த நிலையில் நடிகை மீரா ஜாஸ்மின் பதிவிட்ட சில புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.