close
Choose your channels
NMM

பிரபல நடிகருடன் பார்ட்டியில் மீரா ஜாஸ்மின்: கட்டிப்பிடித்து கொஞ்சிய புகைப்படங்கள் வைரல்!

Sunday, July 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த மீரா ஜாஸ்மின் கடந்த சில வாரங்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் பிரபல நடிகருடன் பார்ட்டியில் கலந்துகொண்ட புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

தமிழ் திரையுலகில் மாதவன் நடித்த ’ரன்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகை மீரா ஜாஸ்மின், அதன்பின் விஜய் நடித்த ’புதிய கீதை’ அஜித் நடித்த ’ஆஞ்சநேயா’ சூர்யா நடித்த ’ஆயுத எழுத்’து விஷால் நடித்த ’சண்டக்கோழி’ உள்பட பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது அவர் ஒரு மலையாளப் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் மீரா ஜாஸ்மின் பல கிளாமர் புகைப்படங்களை சமீபத்தில் பதிவு செய்து வருகிறார் என்பதும் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்

இந்நிலையில் பிரபல நடிகர் நரேனுடன் மீரா ஜாஸ்மின் ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். நரேனை கட்டிப்பிடித்து கொஞ்சுவது உள்பட பல புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்களுக்கு கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.