close
Choose your channels
PatamPoochi
mayoon

இவர் தான் மீரா ஜாஸ்மினின் அண்ணனா? வைரல் புகைப்படங்கள்!

Sunday, January 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை மீரா ஜாஸ்மின் தனது சகோதரனின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து இவர் தான் மீரா ஜாஸ்மின் அண்ணனா? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

நடிகை மீரா ஜாஸ்மின் ’ரன்’ என்ற திரைப்படத்தில் தமிழில் அறிமுகமாகி அதன் பின்னர் புதிய கீதை, ஆஞ்சநேயா, ஜூட் , ஆயுத எழுத்து, உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார் என்பதும், இவர் நடித்த சண்டைக்கோழி திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது ஒரு மலையாளத் திரைப்படத்தில் நடிக்க மீரா ஜாஸ்மின் ஒப்பந்தமாகி இருப்பதாகவும் விரைவில் அந்த படம் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் மிராஜஸ்மின் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் தனது சகோதரரின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதில் என்னுடைய அதிர்ஷ்டமான சகோதரருக்கு இன்று பிறந்தநாள் என்றும், எப்போதும் உங்களது உடல் நலம் மற்றும் அமைதிக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன் என்று அவர் பதிவு செய்துள்ளார்.

மீரா ஜாஸ்மினின் மாற்றுத்திறனாளி சகோதரர் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இவர்தான் மீரா ஜாஸ்மினின் சகோதரா? என்று கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.