close
Choose your channels
iruttu
Capmaari

மிரா வருகையால் களைகட்டும் பிக்பாஸ்

Wednesday, June 26, 2019 • தமிழ் Comments

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு நாட்கள் ஆகிவிட்டபோதிலும் என்னடா இன்னும் குருப் ஃபார்ம் ஆகவில்லையே என்று அனைவரும் நினைத்த நிலையில் இன்று வனிதா தலைமையில் ஒரு குரூப், புதிய போட்டியாளர் மீராவுக்கு எதிராக உருவாகிவிட்டது.

நேற்று கலக்கலாக பிக்பாஸ் வீட்டின் உள்ளே வந்த மீராவுக்கு ஆண் போட்டியாளர்கள் நல்ல வரவேற்பை கொடுத்தாலும் பெண் போட்டியாளர்கள் குறிப்பாக சாக்சி, அபிராமி ஆகியோர் தங்கள் பரம்பரை எதிரி ஒருவரை பார்த்தது போல் மீரா மிதுனை பார்த்தனர்.

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோ வீடியோவில் மீராவை வனிதா, அபிராமி குழுவினர் சுற்றி வளைத்து டார்ச்சர் கொடுக்க, மீரா அதனை மிகவும் அசால்ட்டாக சமாளிக்க என மீரா வருகையால் பிக்பாஸ் நிகழ்ச்சி களை கட்ட தொடங்கிவிட்டது.

இனிவரும் நாட்களில் மீரா மிதுனுக்கு, வனிதா-அபிராமி டீமுக்கும் இடையே நடக்கும் சண்டை சச்சரவால் உள்ளே இருக்கும் மற்ற போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் நல்ல பொழுதுபோக்காக இருக்கும். பிக்பாஸ் திரைக்கதை தற்போதுதான் சூடுபிடித்துள்ளது
 

Get Breaking News Alerts From IndiaGlitz