close
Choose your channels
anabel
friendship

ரஜினியை அடுத்து களத்தில் இறங்கிய மீனா!

Sunday, August 1, 2021 • தமிழ் Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் திரைப்படம் ’அண்ணாத்த’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது என்பதும் இந்த படத்தில் தனது பகுதி டப்பிங் பணியை சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் முடித்தார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது ரஜினியை அடுத்து மீனா தன்னுடைய பகுதி டப்பிங் பணியை தொடங்கி உள்ளார். இது குறித்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினி, மீனாவை அடுத்து குஷ்பூ உள்பட இந்த படத்தில் நடித்த அனைவரும் தங்களது பகுதியின் டப்பிங் பணிகளை முடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ’அண்ணாத்த’ திரைப்படம் ஏற்கனவே தீபாவளி அன்று வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

டி. இமான் இசையில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்த், மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz