close
Choose your channels
NMM
NMM

'த்ரிஷ்யம் 2' படத்தில் மீண்டும் இணையும் மீனா-நதியா: வைரல் புகைப்படம்

Thursday, April 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’த்ரிஷ்யம் படத்தின் இரண்டாவது பாகமான ’த்ரிஷ்யம் 2’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ’த்ரிஷ்யம் படம் போலவே ’த்ரிஷ்யம் 2’ படமும் கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது

குறிப்பாக தெலுங்கில் ’த்ரிஷ்யம் 2’ படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. ’த்ரிஷ்யம் முதல் பாகத்தில் நடித்த வெங்கடேஷ் மற்றும் மீனா இரண்டாவது பாகத்திலும் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிகை நதியா நடித்து வருகிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது மீனா மற்றும் நதியா ஆகிய இருவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. படப்பிடிப்பு தளத்தில் இருவரும் காமெடியாக போஸ் கொடுத்த இந்த புகைப்படங்களை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

மீனா மற்றும் நதியா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே காலகட்டத்தில் நாயகிகளாக நடித்து வந்தார்கள் என்பதும் பிரபு நடித்த ‘ராஜகுமாரன்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் இணைந்து நடித்து உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.