close
Choose your channels
GOAT

ஒண்ணு நான் இருக்கணும், இல்லேன்னா பூர்ணிமா இருக்கணும்.. நேரடியாக நாமினேட் செய்த மாயா..!

Monday, November 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேசன் படலம் நடக்கும். போட்டியாளர்கள் கன்ஃபக்சன் அறைக்கு சென்று இரண்டு சக போட்டியாளர்களை நாமினேட் செய்வார்கள்.

ஆனால் இந்த வாரம் அடுத்தடுத்து திருப்பங்கள் இருக்கும் நிலையில் நாமினேஷனில் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வாரம் போட்டியாளர்கள் நேரடி நாமினேஷன் செய்ய வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்துள்ளதால், ஒவ்வொரு போட்டியாளர்களும் நேரடியாக நாமினேட் செய்யும் காட்சிகள் இன்றைய அடுத்த புரமோவில் உள்ளன.

அதில் செய்வதாக விஷ்ணு, நிக்சன், ஜோவிகா ஆகியோர் விக்ரமை நாமினேட் செய்கின்றனர். பூர்ணிமா, ஆர்ஜே அர்ச்சனா, விஷ்ணு ஆகியோர் அனன்யாவை நாமினேட் செய்கின்றனர். தவறாக ஜட்ஜ்மெண்ட்டுடன் அனன்யா வந்துள்ளதாக விஷ்ணு கூறுகிறார்.

இதனை அடுத்து பூர்ணிமாவை நாமினேட் செய்வதாக மணி, அனன்யா, மற்றும் மாயா கூறுகின்றனர். மாயா கூறும் போது ’நான் பூர்ணிமாவை நாமினேட் செய்கிறேன், ஒண்ணு நான் இருக்கணும் அல்லது அவங்க இருக்கணும் என்று சொல்கிறார். இதனை அடுத்து மாயா பூர்ணிமா தனியாக பேசும் போது ’இந்த வாரம் நீங்கள் கிளம்புறீங்கன்னா, என்னதான் செஞ்சுட்டு போவீர்கள் என்று கேட்க அதற்கு கண்ணீரோடு மாயாவை பூர்ணிமா பார்ப்பதுடன் இன்றைய புரமோ முடிவுக்கு வந்துள்ளது.

மொத்தத்தில் புல்லிங் குரூப்பின் இரண்டு தூண்களாக இருக்கும் மாயா, பூர்ணிமா இடையே பிரச்சனை ஏற்பட்டு விட்டதா? அவர்களது நட்பு முடிவுக்கு வந்து விட்டதா? என்பதை இன்றைய எபிசோடை பார்த்தால் தான் தெரிய வரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment