close
Choose your channels

நிக்சன் கேப்டன் பதவி பறிப்பு? நேரடி நாமினேஷன்? மாயா-பூர்ணிமாவின் பலே திட்டம்..!

Monday, November 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 56 நாட்கள் முடிவடைந்து இன்று 57 வது நாள் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் சில திடீர் திருப்பங்கள் இந்த வாரம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக எக்ஸ் போட்டியாளர்களான விஜய் வர்மா மற்றும் அனன்யா உள்ளே வந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி இந்த வாரம் நிக்சன் கேப்டன் ஆக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அவருக்கு செக் வைக்கும் நிலையில் பிக் பாஸ் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லிவிங் ஏரியாவில் ஒரு மணி வைக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த வாரத்தின் கேப்டன் நிக்சனால் தனக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளதாக யாராவது நினைத்தால், நியாயம் கேட்டு இந்த மணியை அடிக்கலாம் என்று பிக் பாஸ் பெறுகிறார். நிக்சன் மீதான புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டால் நிக்சன் கேப்டன் பதவி பறிக்கப்படும் என்றும் அது மட்டுமின்றி அவர் நேரடியாக நாமினேஷன் செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து வழக்கம் போல் மாயா மற்றும் பூர்ணிமா நிக்சனை எலிமினேஷன் செய்ய வேண்டும், அதற்கான வேலைகளை பார்க்க வேண்டும் என்று திட்டமிடுகின்றனர். இதுவரை இல்லாத வகையில் திடீரென நிக்சன் கேப்டன்ஷிப்பில் மட்டும் பிக்பாஸ் இப்படி ஒரு நிபந்தனையை விதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
Login to post comment
Cancel
Comment