ஹீரோவாகும் 'லியோ' தயாரிப்பாளரின் மகன்.. இன்னொரு பிரபல ஹீரோ.. பூஜை புகைப்படங்கள்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தளபதி விஜய் நடித்த ’லியோ’ படத்தின் தயாரிப்பாளர் மகன் ஹீரோவாக நடிக்கும் படத்தின் பூஜை இன்று தொடங்கிய நிலையில், இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’, ’லியோ’ உட்பட சில திரைப்படங்களை இயக்கிய செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் உரிமையாளர் லலித். இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் ’லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார்.
இந்நிலையில், இந்நிறுவனம் தயாரிக்கும் இன்னொரு படத்தின் பூஜை இன்று தொடங்கியுள்ளது. இந்த படத்தில் விக்ரம் பிரபு ஒரு ஹீரோவாக நடிக்கும் நிலையில், தயாரிப்பாளர் லலித்தின் மகன் அக்ஷய் குமார் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார்.
இந்த படத்தின் பூஜை புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. மேலும், இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் பூஜைக்கு இயக்குநர் வெற்றிமாறன் வருகை தந்து, படக்குழுவினர்களை வாழ்த்தியுள்ளார். மேலும் அவர் லலித் மகனுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Looking forward to giving a wonderful movie. Happy for this awesome team up! 🙏 😊 #SevenScreenStudio12 - Starring the super talented @iamVikramPrabhu along with our beloved @lk_akshaykumar
— Vikram Prabhu (@iamVikramPrabhu) February 11, 2025
Shoot begins today with an auspicious pooja with the gracious presence of Director… pic.twitter.com/v06KqI04N4
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments