close
Choose your channels
RaRa

மாஸ்டர் பட நாயகியின் மாஸ்க் சோதனை... வைரல் வீடியோ!!!

Tuesday, December 29, 2020 • தமிழ் Comments

மாஸ்டர் பட நாயகியின் மாஸ்க் சோதனை... வைரல் வீடியோ!!!

 

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படம் வரும் ஜனவரி 13 ஆம் தேதி திரைக்கு வருகிறது. ஆனால் படம் வெளிவருவதற்கு முன்பே மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் பல லட்சக்கணக்கான இளம் ரசிர்கர்களை கவர்ந்து விட்டார். அதைத் தொடர்ந்து ஒரு சில  முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் இவர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். காரணம் இவர் சமூக வலைத்தளத்தில் படு பிசியாக இருந்து வருகிறார். மேலும் தான் சுற்றுலா செல்லும் இடங்கள், தனது புதிய போட்டோ ஷுட் என அனைத்தையும் உடனுக்குடனே தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.

இவரது பதிவைப் பார்க்கும் இளசுகள் லைக்குகளை அள்ளி வீசுவதோடு அதை வைரலாக்கியும் வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கறுப்பு நிற உடையணிந்த இவரின் ஒரு புகைப்படம் இணையத்தில் கடும் வைரலாகியது. தற்போது கொரோனா பரவலை  மனதில் வைத்துக் கொண்டு இவர் வெளியிட்ட ஒரு வீடியோ மேலும் வைரலாகி இருக்கிறது.

இந்த வீடியோவில் பல மாஸ்க் வகைகளின் பாதுகாப்பை தெளிவாக ஒரு எளிய சான்றுடன் எடுத்துக் காட்டுகிறார். அதில் N95 மாஸ்க் மற்றும் சில வகை மாஸ்க்குகள்  காற்றுப் புகாத வகையில் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது. எனவே காற்றுப்புகாத மாஸ்க்குகளை தேர்ந்தெடுத்து நீங்களும் உங்கள் குடும்பமும் பாதுகாப்பாக இருங்கள் எனப் பதிவிட்டு இருக்கிறார். பொங்கலுக்கு வெளிவரும் மாஸ்டர் படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்து இருக்கின்றனர். இந்நிலையில் மாஸ்க்கின் அவசியத்தை மாளவிகா மோகனன் வலியுறுத்தி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz