close
Choose your channels
Por
Joshwa

ராதையின் கண்ணனாக மாறி ரொமான்ஸ் செய்யும் மஞ்சுவாரியர்.. செம புகைப்படங்கள்..!

Thursday, February 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் கண்ணனாக மாறி ராதையுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் தற்போது தமிழிலும் கவனம் செலுத்தி வருகிறார் என்பதும் குறிப்பாக தனுஷ் நடித்த ’அசுரன்’ அஜித் நடித்த ’துணிவு’ ஆகிய படங்களில் நடித்த இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்று தெரிந்ததை. குறிப்பாக ’துணிவு’ படத்தில் மஞ்சுவாரியாரின் அதிரடி ஆக்சன் காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் மஞ்சு வாரியர் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சுமார் மூன்று மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் , ஃபாலோயர்களை திருப்திப்படுத்த அவ்வப்போது அசத்தல் புகைப்படங்களை பதிவு செய்து வரும் மஞ்சு வாரியார் சமீபத்தில் ராதையின் கிருஷ்ணனாக மாறி ராதையுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அடிப்படையில் பரதநாட்டிய கலைஞரான மஞ்சு வாரியர் கண்ணன் வேடத்திற்கு மிக பொருத்தமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்., இந்த புகைப்படங்களுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாளம், அரபு மொழிகளில் தயாராகி வரும் ‘ஆயிஷா’ உள்பட நான்கு படங்களில் தற்போது மஞ்சுவாரியர் நடித்து வருகிறார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.