close
Choose your channels
NMM

படப்பிடிப்பில் விபத்து! அசுரன் பட நாயகிக்கு படுகாயம்

Friday, January 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ’அசுரன்’ என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்த பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர், மலையாள படம் ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

'சதுர்வேதம்’ என்ற அதிரடி ஆக்ஷன் படத்தில் மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றது இந்த படப்பிடிப்பில் வில்லன்களுடன் மோதும் சண்டைக்காட்சி ஒன்றில் மஞ்சுவாரியர் டூப் இன்றி நடித்தார். பாதுகாப்புடன் கயிறு கட்டியிருந்தபோதும் திடீரென ஏற்பட்ட விபத்தால் மஞ்சுவாரியருக்கு கால், மற்றும் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது.

இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காலில் காயம் ஏற்பட்டதால் அவர் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் வரும் 12ம் தேதி அவர் நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இருந்த நிலையில் இந்த விபத்து காரணமாக அந்த நடன நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.